Home » Department of Tamil
சர். பிட்டி தியாகராயர் பெயரால் தொடங்கப்பட்ட இக்கல்லூரி நிர்வாகம் அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் தோற்றுவிக்கப்பட்டது. இக்கல்லூரியில் சுழற்சி-॥ இல் தமிழ்த் துறையானது 1950௦ முதல் அனைத்து இளங்கலை மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடப்பிரிவு தொடங்கப்பெற்று சீரும் சிறப்புமாக செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டிற்கும் சராசரியாக எண்பத்தைந்து சதவிகிதம் மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்று வருகின்றனர். நூலகத்தில் 6௦௦ க்கும் மேற்பட்ட தமிழ் நூல்களும், அரிய நூல்களும் இடம் பெற்றுள்ளன. தனித்துவம்மிக்க பேராசிரியர்கள் இத்துறையில் பணி ஆற்றியுள்ளார்கள். பல்கலைக்கழக மானியக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ள விதிகளின் அடிப்படையில் தகுதியுள்ள பேராசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
மாணவர்களின் வளர்ச்சியில் முழு கவனம் செலுத்தப்பட்டு தமிழ் அறிவும், உணர்வும் புகட்டும் வகையில் பல்வேறு வகையான பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, மனன போட்டி, வினாடி வினா போட்டி, ஓவியப் போட்டி, போன்ற போட்டிகள் நடத்தப்பெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் தமிழ்த் துறை ஆண்டுவிழாவின் போது வழங்க்கப்பட்டு வருகின்றன. பிற பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் சார்பில் நடைபெறும் பல்வேறு வகையான போட்டிகளில் வெற்றிவாகை சூடி வருவதற்கு இத்துறை பெரிதும் பங்காற்றி வருகிறது.
திரு. இர.அருள்நிதி, உதவிப் பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் (பொறுப்பு), சுழற்சி-II எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றார். சமய இலக்கியம், பக்தி இலக்கியம், சித்தர் இலக்கியம், மற்றும் நவீன இலக்கியம் போன்றவற்றில் புலமைப் பெற்றுள்ளார். பல்வேறு பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலானக் கருத்தரங்குகள், பயிலரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் போன்றவற்றில் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றை வெளியிட்டுள்ளார் அத்துடன் பல்வேறு கருத்தரங்குகளுக்கும் தலைமை தாங்கியுள்ளார். 20 க்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியராகவும், தொகுப்பு ஆசிரியராகவும், பதிப்பாசிரியராகவும் இருந்துள்ளார்.
முனைவர். ௪.அமர், அவர்கள், உதவிப் பேராசிரயராக ஜந்து ஆண்டுகளாக கற்பித்தல் பணியினை செம்மையாக மேற்கொண்டு வருகின்றார். பல ஆய்வுக்கட்டுரைகளை தேசிய மற்றும் மாநில அளவிலான கருத்தரங்குகள், பயிலரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் போன்றவற்றில் கலந்து கொண்டு வெளியிட்டு விருதுகளை பெற்றுள்ளார். “அருணகிரிநாதர் படைப்புகள் – ஓர் ஆய்வு” என்ற தலைப்பில் முனைவர் பட்டத்தை பெற்றுள்ளார். சமய இல்லக்கியத்தில் சிறப்பு தகுதி பெற்றுள்ளார்.
முனைவர். கா.ஆறுமுகம், உதவிப் பேராசிரயராக நான்கு ஆண்டுகளாக கற்பித்தல் பணியினை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றார். தேசிய மற்றும் மாநில அளவிலான கருத்தரங்குகள், பயிலரங்குகள், பயிற்சி பட்டறைகள் போன்றவற்றில் கலந்து கொண்டு கட்டுரைகளை வெளியிட்டு விருதுகளை பெற்றுள்ளார். நாட்டுப்புறவியல் துறையில் சிறப்பு தகுதி பெற்றுள்ளார். “ஜவ்வாது மலைவாழ் மக்களின் வாழ்வியல் – ஓர் ஆய்வு” என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
Qualification : B.Lit.,M.A., M.Phil., NET
Qualification : M.A.,Ph.D.,
Qualification : M.A., M.Phil., D.Lit. D.Coop. Ph.D.,
Qualification : M.A.,M.Phil., Ph.D.,